நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)

Sudha Selvakumar
Sudha Selvakumar @cook_28803866

பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்...

நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)

பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்
  1. 1கப்,பச்சரிசி
  2. தலா கால் கப்புழுங்கல் அரிசி, அவல்
  3. 3டேபிள் ஸ்பூன்முழு உளுந்து
  4. ஒரு டீஸ்பூன்வெந்தயம்
  5. கால் கப்தேங்காய் துருவல்
  6. கால் கப்டூட்டி புருட்டி
  7. ஒரு டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  8. ஒரு கப்வெல்லம் அல்லது கருப்பட்டி துருவல்
  9. ஒரு கப்நாவல் பழக் கூழ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    செய்முறை

    அவலை நன்றாக தண்ணீரில் அலசி பத்து நிமிடங்கள் நீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    அரிசி, உளுந்து, வெந்தயத்தை நீர்ல் மூன்று மணி நேரம் ஊற வைத்து ஊறின அவலுடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரக்கவும்

  3. 3

    ஆறு மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்

  4. 4

    பிறகு அதில் தேங்காய் துருவல், நாவல் பழ கூழ்,, டூட்டி பூருட்டி,,வெல்லத் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

  5. 5

    இதய வடிவ இட்லி பானை அல்லது சிலிகான் மோல்டில் நெய் சிறிதுதடவி மாவை ஊற்றி ஆவியில் 10-12 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்

  6. 6

    சுவையான சத்தான நாவல் பழம் இட்லி தயார்..சீசனுக்கு தகுந்த மாதிரி நாவல் பழத்திற்கு பதில் மாம்பழம், பப்பாளியில் கூட இட்லி செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Selvakumar
Sudha Selvakumar @cook_28803866
அன்று

Similar Recipes