ஆரோக்கியமான பசி தூண்டும் காய்கறி சூப்

SP
SP @SP_Recipes

#Keerskitchen #tamilrecipe
எல்லோருக்கும் வணக்கம்!

மிகவும் எளிமையான ஆரோக்கியமும் அறுசுவையும் நிறைந்த SP_ Recipes க்கு வருக!

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 - 5 சேவைகள்
  1. 1 தே.கஎண்ணெய்
  2. 1.5 மே.கவெண்ணை
  3. 4பூண்டு
  4. நறுக்கிய இஞ்சி துண்டுகள்
  5. தேவையான அளவுபுதினா
  6. 1/3 கப்வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1/3 கப் கேரட்
  9. 1/3 கப்பீன்ஸ்
  10. 1/3 கப்பட்டாணி
  11. 1/3 கப்சோளம்
  12. 1/4 கப்குடை மிளகாய்
  13. (4 - 5) கப்தண்ணீர்
  14. தேவையான அளவுஉப்பு
  15. 1/2 தே.கமஞ்சள் தூள்
  16. 1/2 தே.கசீரகத் தூள்
  17. 3/4 தே.கமிளகுத் தூள்
  18. 1 மே.கசோள மாவு
  19. 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் வெண்ணையை உருக்கி, அதில் பூண்டு இஞ்சியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இப்பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடியாக மாறும் வரை வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் பின்னர் சிறிது புதினா சேர்க்கவும்.

  4. 4

    இப்பொழுது நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி, சோளம் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் சூபிற்க்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்த் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், (4-5) கப் தண்ணீர் மற்றும் 2 மேஜைக் கரண்டித் தண்ணிரில் கரைத்த சோளமாவைச் சேர்த்துக் காய்கறிகள் வேகும் வரை மூடி சமைக்கவும்.

  6. 6

    வெந்ததும் இறுதியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் எலும்மிச்சை சாறு சேர்த்து ஒரு கொத்தி விட்டு அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    இப்போது சூப் நன்றாகவும் அடர்த்தியாகவும் இருப்பதை நீங்கள் காணலாம்.
    சுடச் சுட சூப் தயார்!

    பரிமாறும் குறிப்பு:
    மசாலா/பூண்டு சுவை ஏற்றப்பட்ட காய்ந்த பிரட் துண்டுகளுடன் சேர்த்துப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SP
SP @SP_Recipes
அன்று

Similar Recipes