வீட்டிலேயே செய்த சுத்தமான பசும்பால் வெண்ணை(Homemade Pure Butter)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#colours3
வெள்ளை வண்ணம்..
பசும்பாலில் இருந்து சுலபமாக செய்த சுத்தமான வெண்ணை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500கிராம் தினமும் காய்ச்சிய பாலிலிருந்து சேர்த்து வைத்த பாலாடை
  2. 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  3. 15 ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தினமும் காய்ச்சிய பாலில் இருந்து சேர்த்து வைத்த பாலாடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தயிர் சேர்த்து, தினமும் ஃப்ரிட்ஜில் சேகரித்து வைக்கவும். ஒரு மாதம் வரை சேர்ந்ததும், ப்ரிட்ஜில் இருந்து எடுத்து, உடனே மிக்ஸி ஜாரில் சேர்த்து, 2 ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் ஐஸ் கட்டிகள் உடன் பாலாடை சேர்த்து நன்றாக அரைக்கவும். வெண்ணை தனியாக பிரிந்து வரும் வரை அரைக்கவும். வெண்ணெயை கையில் எடுத்து குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டியுடன் போட்டு வைக்கவும்.

  3. 3

    அனைத்து பாலாடைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வெண்ணையை பிரித்து எடுத்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  4. 4

    குளிர்ந்த தண்ணீரில் இரண்டு முறை நன்றாக கழுவி வைக்கவும்.

  5. 5

    பிறகு அந்த வெண்ணையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு, நன்றாக நெய் சுண்டி வரும் வரை வைத்திருக்கவும். நெய் வாசம் வந்தவுடன், வரமிளகாய், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  6. 6

    நெய் நன்றாக வாசமாகவும் திக்காகவும் வந்தவுடன் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes