எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2உருளைக்கிழங்கு
  5. 1 கப் புதினா
  6. 2 பச்சை மிளகாய்
  7. 3மேஜைக் கரண்டி தயிர்
  8. அரை மூடி தேங்காய் பால்
  9. 8 பாதாம்
  10. 4 முந்திரி
  11. 1 மேஜைக்கரண்டி நிலக்கடலை
  12. 1பிரிஞ்சி இலை இல்லையென்றால் ரம்பை இலை
  13. 1 இன்ச் பட்டை
  14. 4கிராம்பு
  15. 2 ஏலக்காய்
  16. 1மேசைக்கரண்டி நெய்
  17. 3 குழிக்கரண்டி எண்ணெய்
  18. 1/2மேசைக் கரண்டி மஞ்சள் தூள்
  19. 4 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  20. 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது கள்
  21. 1 மேஜைக்கரண்டி சீரகத் தூள்
  22. தேவையான அளவுஉப்பு
  23. சிறிதளவுகறிவேப்பிலை
  24. சிறிதளவு கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும், ஒரு மிக்ஸி ஜாரில் நிலக்கடலை பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு குக்கரை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது கள் சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்

  4. 4

    அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், பச்சை மிளகாய் மற்றும் நான் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், கறியை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்

  5. 5

    செக்ஸ்வீடியோ கரை சேர்த்த பின் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி

  6. 6

    3 விசில் வரை விட வேண்டும், பின் குக்கரில் பிரஷர் அனைத்தும் இறங்கியதும் கறியை நன்கு கிளறி விட வேண்டும்

  7. 7

    பின் அதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பால் மற்றும் நிலக்கடலை பாதாம் மற்றும் முந்திரி கலவை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  8. 8

    தேவைப்பட்டால் தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், ஒரு மூடி போட்டு நன்கு கொதி வரும்வரை விட வேண்டும்

  9. 9

    மல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்,

  10. 10

    ராமநாதபுரம் ஸ்பெஷல் மட்டன் களறி கறி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes