எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2சிறியஉருளை கிழங்கு
  2. 1கப்காலிபிளவர்
  3. 3பின்ஸ்
  4. 10சிறியவெங்காயம்
  5. 2தக்காளி
  6. 2பச்சைமிளகாய்
  7. சிறிதுகொத்தமல்லி கருவேப்பிலை
  8. 2ஸ்பூன்இஞ்சி பூண்டு
  9. 1/4 மூடிதேங்காய் துருவல்
  10. 2 ஸ்பூன்பொட்டு கடலை
  11. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. 2ஸ்பூன்மல்லி தூள்
  13. 1/2டீஸ்பூன்மஞ்சள்தூள்
  14. 2 டீஸ்பூன்சோம்பு தூள்
  15. 2 டீஸ்பூன்கரம் மசாலா
  16. தேவையான அளவு உப்பு
  17. தேவையான அளவுதாளிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து மிதமான தண்ணீர் சூட்டில் உப்பு சேர்த்து 10 நிமிடம் கலந்து வைக்கவும்.காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்.காலிபிளவரை 10 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

  2. 2

    பிறகு தேங்காயை பொட்டு கடலையுடன் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 2 பட்டை 3 கிராம்பு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை சேர்த்து வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சோம்பு தூள் சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.

  4. 4

    பிறகு காய்கறிகள் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும் பிறகு இறக்கி பரிமாறவும்.இதனை இட்லி தோசை சப்பாத்தி ஆகியவைகளுடன் சாப்பிடலாம் சுவையான உருளைக்கிழங்கு காலிபிளவர் குருமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes