பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#vattaram
மிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்....

பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)

#vattaram
மிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4பேர்
  1. 4- ரொட்டி துண்டுகள் (கனமாக வெட்டிய துண்டுகள் அ 8 மெல்லியது)
  2. 5 முட்டை
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 2 ஸ்பூன் வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/4 ஸ்பூன் சீரக‌ பொடி
  10. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/4 கப் துருவிய சீஸ்
  12. சிறிதுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலை இவற்றை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    4 முட்டையை முழுவதும்...1 முட்டை வெள்ளைக்கரு மட்டும் சேர்க்கவும்..

  3. 3

    எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகாயை வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் சேர்த்து,உடன் உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் மிளகாய் தூள் சேர்க்கவும்....

  5. 5

    இதனுடன் சீரகப் பொடி, கரம் மசாலா,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    வதங்கிய வெங்காயம், மல்லி இலை போன்றவற்றை முட்டையுடன் சேர்க்கவும்..

  7. 7

    இதனை நன்கு நுரை வரும் வரை ஒரு முள் கரண்டியால் அடிக்கவும்...

  8. 8

    முட்டைக் கலவையில் ஒரு ரொட்டித் துண்டை, இரண்டு புறமும் தோய்த்து.. வெண்ணெய் சேர்த்து தோசைக்கல்லில் சுடவும்.....

  9. 9

    மிதமான தீயில் வைத்து மறுபுறமும் சுட்டு எடுக்கவும்..

  10. 10

    இதன்மீது சீஸை தூவி ஒரு நிமிடம் தீயில் வைத்து பின்பு பரிமாறவும்.... தக்காளி கெட்சப்புடன் பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes