"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Vattaram
#வட்டாரம்
#Week-15
#வாரம்-15
#அரியலூர் மட்டன் கிரேவி
#Ariyalur Mutton Gravy

"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)

#Vattaram
#வட்டாரம்
#Week-15
#வாரம்-15
#அரியலூர் மட்டன் கிரேவி
#Ariyalur Mutton Gravy

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோமட்டன்
  2. 6டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  3. 1/2டீஸ்பூன்வெந்தயம்
  4. 1கொத்துகருவேப்பிலை
  5. 2காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய்
  6. 2பல்லாரி வெங்காயம்
  7. 6தக்காளி பழம்
  8. தேவையான அளவுஉப்பு தூள்
  9. 1ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  10. 1டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1/2டீஸ்பூன்மிளகு தூள்
  12. 1டீஸ்பூன்சீரகம் தூள்
  13. 1/2டீஸ்பூன்பட்டை,கிராம்பு,ஏலக்காய் தூள்
  14. 1ஸ்பூன்கொத்தமல்லித்தூள்
  15. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  16. 1டீஸ்பூன்கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
  17. 4ஸ்பூன்தயிர்
  18. 1கப்தேங்காய்-(தேங்காய் பால் 1பவுல்)
  19. தேவையான அளவுகொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரியலூர் மட்டன் கிரேவி செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்....

  2. 2

    ஒரு பிரஸ்ஸர் குக்கரில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

    எண்ணெய் காய்ந்த பிறகு 1/2டீஸ்பூன் வெந்தயம்,2காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய்,1கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பொடியாக நறுக்கிய 2பல்லாரி வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

    பொடியாக நறுக்கிய 6தக்காளி பழத்தை போட்டு வதக்கவும்.

    1ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,1டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

  4. 4

    1/2டீஸ்பூன் மிளகு தூள்,1டீஸ்பூன் சீரகம் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் பட்டை,கிராம்பு,ஏலக்காய் தூள்,1ஸ்பூன் கொத்துமல்லித்தூள் போட்டு மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

  5. 5

    மட்டன் துண்டுகளை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.4ஸ்பூன் தயிர் போட்டு பிரட்டவும்,1கப் தேங்காய் விழுதில் எடுத்த தேங்காய் பால் 1பவுள் ஊற்றவும்.

  6. 6

    1டீஸ்பூன் கரம் மசாலா போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

  7. 7

    பிரஸ்ஸர் குக்கரில் டயர்,வெயிட் போட்டு மூடி 5-7 விசில் விடவும்.

    தேவையான அளவு கொத்தமல்லித்தழை போடவும்.

    பின் திறந்து பார்த்து தேங்காய் பால் சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்...

  8. 8

    "அரியலூர் மட்டன் கிரேவி" தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes