சிக்கன் பெப்பர் கிரேவி

sabu
sabu @sabu_07

#ilovecooking
சிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.
Nutritive caluculation of the Recipe:
📜ENERGY- 287.83 Kcal
📜PROTEIN- 20g
📜FAT- 21.63g
📜CARBOHYDRATE- 3.37g
📜CALCIUM- 43.15 mg

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4 கிலோ சிக்கன்
  2. 1/4 கிலோ சின்ன வெங்காயம்
  3. 15g தேங்காய்
  4. 6g மிளகு
  5. 2g சீரகம்
  6. 2gசோம்பு
  7. 1tsp மல்லித் தூள்
  8. 1/2 tsp மஞ்சத்தூள்
  9. 1tsp கரம் மசாலா
  10. 1/2tbsp இஞ்சி பூண்டு விழுது
  11. 10ml கடலெண்ணெய்
  12. 1 காய்ந்த மிளகாய்
  13. உப்பு தேவையான அளவு
  14. கருவேப்பிலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் மல்லித்தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு மஞ்சள் தூளில் சிக்கனை கழுவி அதை சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் மிளகு சோம்பு சீரகம் ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு அரைத்து வைத்த பொடியை கடாயில் சேர்த்து அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  6. 6

    பிறகு நன்கு கொதித்தவுடன் தண்ணீர் வற்றியவுடன் என்னை பிரிந்த உடன் கருவேப்பிலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sabu
sabu @sabu_07
அன்று

Similar Recipes