எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 2 கப் பச்சரிசி மாவு
  2. 2 மேஜை கரண்டி உளுத்தம் பருப்பு மாவு
  3. 1/2 கப் துருவிய தேங்காய்
  4. 1/2 கப் வெல்லப்பாகு
  5. 4 மேஜைகரண்டி வெண்ணை
  6. உப்பு தேவையான
  7. 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  8. 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  9. தேவையான அளவுஎண்ணை பொரிப்பதற்கு
  10. 2 மேஜை கரண்டி வெள்ளை எள்ளு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    வெல்ல சீடை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் ஒரு கப் பச்சரிசி மாவு தேங்காய் வெள்ளை எள்ளு வெண்ணை ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும், வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மெதுவாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    எல்லாம் வெள்ளை பாகையும் மொத்தமாகவும் ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்,

  4. 4

    உப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் சிகப்பு பச்சை அரிசி மாவை சேர்த்து பின் அதனுடன் உளுத்தம்பருப்பு மாவு, துருவிய தேங்காய், வெள்ளை எள்ளு, வெண்ணெய், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பின் மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,

  7. 7

    எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்,

  8. 8

    சுவையான வெள்ள மற்றும் உப்பு சீடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes