உருளைக் கிழங்கு பட்டாணி கிரேவி(potato peas gravy recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

உருளைக் கிழங்கு பட்டாணி கிரேவி(potato peas gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 100 கி பட்டாணி
  2. 3உருளைக்கிழங்கு
  3. 2 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. 1பட்டை,
  8. 1 பிரீஞ்சி இலை,
  9. 4 கிராம்பு,
  10. 1 நட்சத்திர பூ
  11. 2 ஸ்பூன் குழம்பு மசால்த் தூள்
  12. தேவைக்கேற்ப உப்பு
  13. 1 pinch பெருங்காயத்தூள்
  14. 100 ml நல்லெண்ணெய்
  15. ஒருக் கொத்து மல்லி மற்றும் புதீனா இலைகள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் 100 கி பட்டாணியை தண்ணீரில் 4 மணிநேரம் ஊற வைத்து பின் குக்கரீல் 1 pinch பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து 4 விசில் விட்டு வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் குக்கரீல் 100 ml எண்ணெய் விட்டு அதில் 1 பட்டை, பிரீஞ்சி,நட்சத்திர பூ, 4 கிராம்பு, 1/4 ஸ்பூன் சீரகம்ச் சேர்த்து பொறிய விடவும் பின் 2 வெங்காயத்தை சிறிதாக நறுக்கிச் சேர்க்க வேண்டும் பின் சுவைக்கு உப்புச் சேர்க்கவும்

  3. 3

    பிறகு 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பின் தக்காளியைச் சேர்க்கவும் அனைத்தும் வெந்ததும் 3 உருளைக் கிழங்கை தோல் சீவி பெரிதாக நறுக்கிச் சேர்க்கவும்

  4. 4

    பின் 2 ஸ்பூன் குழம்பு மசால்த் தூள்ச் சேர்த்து வதக்கவும் பச்சைவாசனை போகவும் அவித்த,பட்டாணி மற்றும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒருக் கொத்து மல்லி மற்றும் புதீனா இலைகளைத் தூவி குக்கரை மூடி 2 விசில் விடவும்

  6. 6

    பின் இறக்கி சூடாக பரிமாறவும் கறிக் குழம்பு சுவையில் வந்தது விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் அரைத்தும் ஊற்றிக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes