ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#npd4
ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது.

ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)

#npd4
ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 400 கிராம் ஸ்பகட்டி
  2. 4 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில்
  3. 7 பல் பூண்டு
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1/2 கப் நறுக்கிய குடைமிளகாய்
  6. 1/2 கப் நறுக்கிய கேரட்
  7. 15 தக்காளி
  8. 1 மேஜைக்கரண்டி ஓரிகனோ
  9. 1 மேஜைக்கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ்
  10. 1மேஜைக் கரண்டி மிளகுத் தூள்
  11. 1 மேஜைக்கரண்டி உப்பு
  12. 1 தேக்கரண்டி சர்க்கரை
  13. தேவையானஅளவு பேசில் இலைகள்
  14. 6மேஜைக் கரண்டி துருவிய சீஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தக்காளியை பின்பக்கம் பெருக்கல் குறி யில் கீறி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். தக்காளி வெந்து தோல் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    ஐஸ் கட்டிகள் சேர்த்து தண்ணீரில் தக்காளியை போடவும். ஆறியபின் தோலுரித்து முடிந்தவரை உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். இவற்றை ஃபுட் ப்ராசசர் இல் சேர்த்து படத்தில் காட்டியுள்ளபடி அரைத்துக் கொள்ளவும். மைய அரைக்கக் கூடாது.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் எடுத்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து வேகவிடவும். 4 மேஜைக்கரண்டி உப்பு சேர்த்து நூடுல்ஸ் வேக வைக்கவும். 90% நூடுல்ஸ் வெந்தவுடன் வடிகட்டியில் ஊற்றி தண்ணீர் வடிக்கவும். குளிர்ந்த நீரில் நூடுல்சை அலசி வைக்கவும்.

  4. 4

    காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்து சூடானதும் எடுத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இதில் உப்பு மிளகுத்தூள் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஆரிகனோ சேர்க்கவும். பேசில் இலைகளையும் கைகளால் கீறி சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் துருவிய சீஸ் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    இறுதியில் வடித்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால் பரிமாறும் முன் தேவையான அளவு மேலும் சீஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes