ஆம்லெட் தோசை😋 (Tomoto onion wheat omlet dosa recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ed1
குழந்தைகள் ஆம்லெட் தோசை என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கோதுமை தோசை ஊத்தி கொடுத்தாள் வழ வழ என்று இருந்தது என்று சாப்பிட மறுப்பார்கள். அதனால் கோதுமை மாவில் இதுபோல் அலங்கரித்து புது மாதிரியான தோசை என்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தோசை மிகவும் நல்லது.டயட்டில் இருப்பவர்கள் இதில் இரண்டு தோசை சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். மீண்டும் பசிக்க நேரம் எடுக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். மிகவும் எளிதாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பேர்
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 3 பெரிய சைஸ் தக்காளி
  3. 2 பெரிய சைஸ் வெங்காயம்
  4. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  5. ஒரு ஸ்பூன் சீரகம்
  6. தேவையான அளவுதூள் உப்பு
  7. கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கியது
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    2 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு நீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பெரிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி தழை மூன்றையும் தனித்தனியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். புதிதான கொழுந்து கருவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    தோசைக்கல்லை வைத்து சூடு ஏறிய பிறகு ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து வட்ட வடிவமாக கொஞ்சம் மொத்தமாக ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு மிளகுத்தூளை தூவி கொள்ளவும். பிறகு முதலில் வெங்காயத்தை தோசையில் பரவலாக தூவிவிடவும் அதன்மேல் தக்காளியை தூவி விடவும். பிறகு கொத்தமல்லி தலை தூவி விடவும் கருவேப்பிலை மேலே பரப்பி விடவும். தோசையை சுற்றி உங்களுக்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.குழந்தைகள் என்றால் சிறிது எண்ணெய் சேர்த்து கொடுக்கவும் டயட்டில் உள்ளவர்கள் லேசாக எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

  4. 4

    மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும். பிறகு மெதுவாக திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து அடுப்பை நிறுத்தி அதன் சூட்டிலேயே தக்காளி வெங்காயத்தை வேக விட்டுக் கொள்ளவும். சுவையான கோதுமை தோசை தக்காளி ஆம்லெட் தயார்.இதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது சட்னி தேவை என்றால் செய்து கொள்ளவும் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes