கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)

கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 2 கப்பதப்படுத்திய பச்சரிசி மாவு
  2. 11/2 கப்பாகு வெல்லம்
  3. 11/2 கப்தண்ணீர்
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 1 டேபிள் ஸ்பூன்வெள்ளை எள்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கடாயில் வெல்லத்தை போடவும்.

  2. 2

    வெல்லத்தில் 11/2 கப் தண்ணீர் விடவும்.அடுப்பை சிறியதாக்கி வெல்லம் கொதித்து கரைந்ததும் நிறுத்தி விடவும்.

  3. 3

    ஆறினதும் நன்கு வடிகட்டவும்.கடாயில் வடிகட்டிய வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பை சிறிய தாக்கி பாகு காய்ச்சவும்.

  4. 4

    பாகு ஒரு கம்பி பதம் வந்தால் போதும்.பிறகு அரிசி மாவை கட்டி தட்டாமல், சிறிது சிறிதாக போடவும்.நன்கு ஒன்று சேர கிளறவும்.

  5. 5

    பாகு சற்று கெட்டியானதும், வெள்ளை எள் போட்டு கிளறவும்.பின் 11/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.அதனை ஒரு பாத்திரத்தில் ஆறினதும் எடுத்து விட்டு 1 ஸ்பூன் நெய் விடவும்.

  6. 6

    பிறகு அதனை தட்டு போட்டு மூடி, 1 நாள் முழுவதும் ஊறவிடவும்.மறு நாள் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அடுப்பை சிறிய தாக்கவும்.பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி, மாவை உருட்டி அதன் மேல் நெய் தடவிய மற்றோரு பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து டவராவால் அழுத்தவும்.

  7. 7

    ஷீட்டை எடுத்து விட்டு தட்டினதை எடுத்து எண்ணெயில் போடவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் எண்ணெயை நன்கு வடித்து எடுக்கவும்.

  8. 8

    எல்லா மாவு களையும் இதே போல் தட்டி தட்டில் எடுக்கவும்.ஆறினதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.இப்போது, சுவையான,* அதிரசம்* தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes