ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)

#m2021
இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு காயையும் ஒரே சைஸில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு சத்தம விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.பிறகு அதே குக்கரில் தட்டைப்பயிறு துவரம்பருப்பு இரண்டையும் மற்றும்மஞ்சள்தூள் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து ஐந்து அல்லது ஆறு சவுண்ட் நன்கு வேகும் வரை வேக விட்டுக் கொள்ளவும். தட்டைப்பயிறு துவரம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக கூட வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். பருப்பு வெந்தவுடன் லேசாக மசித்துக் கொள்ளவும்.
- 2
இதற்கிடையில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக ஒட்டிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு கொஞ்சம் சீரகம் இரண்டு வரமிளகாயை கிள்ளி சேர்க்கவும். கருவேப்பிலை சேர்த்து நன்கு வாசம் வர சிவக்க வறுத்துக்கொள்ளவும். இந்த தாளிப்ப வேக வைத்த காயில் சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 3
பிறகு வேகவைத்த பருப்புகளை இதில் சேர்த்து நன்கு மீண்டும் ஒரு கொதி விடவும்.ஒரு கொதி வந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும்.உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும் தேவை என்றால் தூள் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- 4
கடைசியாக கால் கப் பாலை கூட்டில் சேர்த்துக் கொள்ளலாம். பாலுக்கு பதில் கால் கப் தயிர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.பால் சேர்த்து கலந்து லேசாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான ஹோட்டல் ஸ்டைல் கூட்டு ரெடி.
- 5
சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். காய்கறிகள், பருப்புவகைகள்,தேங்காய், சீரகம்,எல்லாம் சேர்த்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எங்கள் வீட்டில் இன்று இந்த கூட்டு, கோவைக்காய் பொரியல், ரசம் தயிர் ஆகியவை மதிய உணவு வகைகளாகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பாலாக்கீரை பாசிப்பருப்பு பால் கூட்டு🥗🍶
#nutrient1 #bookபாலாகீரையில் பல நன்மைகள் உண்டு. புரத சத்து அதிகம் நிறைந்தது.ரத்தம் விருத்தியடையும். இந்தக் கீரையுடன் வேப்பிலை, மஞ்சள் தூள், ஓமம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் பெருவயிறு குறையும். போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்கு நல்லது.குழந்தை பெற்றவர்கள் உட்கொண்டால் பால் அதிகம் சுரக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். மெக்னீசியம், ஜிங்க், காப்பர், விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்கும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் மாரடைப்பு ரத்த குழாய் அடைப்பு வராமல் தடுக்கும். சிறு பருப்புடன் கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.பாலில் கால்சியம் சத்து( 12./.)அதிகம் உள்ளது. புரோட்டின் சத்தும் 3.4 கிராம் உள்ளது. விட்டமின் பி, விட்டமின் b 16, மெக்னீசியம் பொட்டாசியம், சோடியம் ,காலன்மின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பல சத்துக்கள் நிறைந்த பாலா கீரை, புரதம் நிறைந்த பாசிப்பருப்பு மற்றும் கால்சியம் நிறைந்த பால் சேர்த்து செய்த கூட்டு இது. உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது Meena Ramesh -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து முளைக்கீரையை சேர்த்து செய்த கீரை கூட்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. கீரையிலுள்ள இரும்பு சத்தும் பருப்பில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steamஇது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன். Meena Ramesh -
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
மணத்தக்காளி கீரை வாய்ப்புண் வயிற்றுப்புண் மற்றும் வெளிப் புண்கள் எது இருந்தாலும் எடுத்துக் கொண்டால் விரைவில் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணிற்கு மிக மிக அருமையான நிவாரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு.ஆரம்ப காலத்திலேயே அந்தந்த நோய்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆரம்பித்திலேயே நோயை கட்டுப்படுத்தி விடலாம். மிகவும் பெரிதாகி விட்டால் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குண்டான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.இந்தக்கீரை மட்டுமல்லாமல் தொய்யக்கீரை என்று ஒன்று உண்டு அந்த கீரையும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை நன்கு ஆற்றி விடும்.இந்த கீரைகள் சிறிது கசக்கும் அதற்கு பாசிப்பருப்பு நிறைய சேர்த்து வேக வைத்தால் கசப்பு அடங்கிவிடும். டிப்ஸ் : மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் கீரைகளை நன்கு அலசினால் சுவையும் கூடும் கசப்புத் தன்மையும் நீங்கி விடும். Meena Ramesh -
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)
வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.#cookwithmilk Renukabala -
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
Spring onion suji uppuma (Spring onoin sujji upma recipe in tamil)
#onepotஅடிக்கடி ஒரே மாதிரி உப்புமா செய்தால் வீட்டில் ஒரே போர் என்கிறார்கள்.வெங்காயத்தாள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதன் பச்சை வாசமே கூட எனக்கு பிடிக்கும்.எனக்கு பொதுவாக எல்லாவற்றிலும் வெங்காயம் பூண்டு நிறைய சேர்த்து சமைப்பது மிகவும் பிடிக்கும்.குறிப்பாக உப்புமா,பருப்பு சாம்பார்,அடை போன்றவை.அதனால் வித்தியாசமாக வெங்காய தாள் வெங்காயத்துடன் சேர்த்து வணக்கி உப்புமா செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.வீட்டிலும் இன்று உப்புமா வித்தியாச சுவையுடன் நன்றாக உள்ளது என்றார்கள். Meena Ramesh -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
- நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
கமெண்ட் (4)