கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...

ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பருப்பு வேக வைக்க
  2. 1 டம்ளர் துவரம் பருப்பு
  3. 5 பல் பூண்டு
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. கொஞ்சம்நல்லெண்ணெய்
  6. கொஞ்சம்மஞ்சள் பொடி
  7. கொஞ்சம்பெருங்காயம்
  8. தாளிக்க
  9. தேவைக்கேற்ப எண்ணெய்
  10. கடுகு உளுந்து
  11. கருவேப்பிலை
  12. 15சின்ன வெங்காயம் நறுக்கியது
  13. 2 தக்காளி
  14. 3 கத்திரிக்காய்
  15. 1 வாழைக்காய்
  16. 1 கீத்து அரசாணிக்காய்
  17. 5 அவரைக்காய்
  18. 5 கோவைக்காய்
  19. 1 சின்ன மேரைக்காய் (சௌ சௌ)
  20. 2உருளைக்கிழங்கு
  21. 2 1/2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  22. தேவைக்கேற்ப உப்பு
  23. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வேக வைக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து பருப்பை மைய வேக வைத்துக் கொள்ளவும்... கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். மற்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    எனக்கு 6 அக்காய் தான் கிடைச்சது.. அதான் 7 வதா உருளைக்கிழங்கு சேர்த்துகிட்டேன்🙈🙈... அதுவும் சுவையை கூட்டி தான் கொடுக்கும்... மாங்காய் கிடைச்சா சிறப்பு...

  2. 2

    மண் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து, கருவேப்பிலை போட்டு பொறிஞ்சதும் சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு காய்கறிகளை போட்டு கிளறவும்.

  3. 3

    2 நிமிடம் வதங்கியதும், சாம்பார் தூள், உப்பு, மசித்த பருப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்... சுண்டியவுடன் இறக்கவும்...

    புளி தேவையில்லை...

  4. 4

    அபாரமான சுவையில் கதம்ப சாம்பார் தயார்... கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க..

    ஆனந்தமா சாப்பிடுங்க...
    ஆரோக்கியமா இருங்க....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes