மசால் தோசை(masal dosai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#made3
எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

மசால் தோசை(masal dosai recipe in tamil)

#made3
எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3பேர்
  1. தேவையான அளவு(இட்லி)தோசை மாவு,
  2. 3-4உருளைக்கிழங்கு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1மிளகாய்
  5. 1ஸ்பூன் இஞ்சி,பொடிதாக நறுக்கியது
  6. 1/2+1/4ஸ்பூன் சீரக தூள்
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1ஸ்பூன் மல்லித்தழை, நறுக்கியது
  10. தாளிக்க:
  11. 3ஸ்பூன் கடலை எண்ணெய்
  12. 1/2ஸ்பூன் கடுகு
  13. 1ஸ்பூன் கடலை பருப்பு
  14. 1/4ஸ்பூன் சீரகம்
  15. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு வாணலியில்,எண்ணெய் ஊற்றி சூடானதும்,கடுகு கடலைப்பருப்பு,சீரகம், கறிவேப்பிலை தாளித்து,பின் இஞ்சி சேர்த்து வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்

  3. 3

    வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் 1/2ஸ்பூன் சீரக தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    பின் 1டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,வேக வைத்த உருளை கிழங்கை சேர்த்துக் கிளற வேண்டும்.

  5. 5

    உருளைக்கிழங்கு இன்னும் நன்றாக மசியும் வரை அடிக்கடி கிளறி விட வேண்டும்.பின், உப்பு சரி பார்த்து,1/4ஸ்பூன் சீரக தூள் சேர்த்து கிளறவும்.

  6. 6

    மசாலா ரொம்பவும் கெட்டியாகிவிட்டால் தோசை மேல் வைக்கும் போது ஒட்டாமல் இருக்கும்.எனவே,சிறிதளவு கிரேவி பதம் இருக்கவேண்டும்.

    கடைசியாக மல்லித்தழை சேர்த்து கிளறவும்.

  7. 7

    இனி,அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு,1.5கரண்டி மாவு விட்டு விரித்து எண்ணெய் சேர்த்து வேக விடவும்.

    ரொம்ப மெலிதாக தோசை ஊற்றக் கூடாது.

  8. 8

    கீழ்ப்புறம் நன்றாக,பிரவுன் கலரில் வெந்து வரும் போது,உருளை மசாலா,தோசையின் ஓரத்தில் அல்லது மையத்தில் வைத்து,நமக்கு பிடித்தவாறு மடக்கி விட்டு 2 புறமும் மாற்றி போட்டு மொறு மொறுப்பாக எடுக்கவும்.

  9. 9

    அவ்வளவுதான். சுவையான,மசால் தோசை ரெடி.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes