முட்டைமசாலா பிரட் டோஸ்ட் (Eggmasala bread toast recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
  1. 8 துண்டுகள் கோதுமை பிரட்
  2. 4முட்டை
  3. 2 வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2கேரட்
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன் மேக்கி மசாலா தூள்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  11. 1/4 டீஸ்பூன் உப்பு
  12. 2டேபிள் ஸ்பூன் எண்ணை
  13. மல்லி இலை
  14. 2டேபிள் ஸ்பூன் பட்டர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பிரட் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி தயாராக வைக்கவும்.

  3. 3

    பின்னர் பிரட் எடுத்து பட்டர் தடவி தயாராக வைக்கவும்.

  4. 4

    பின்னர் வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    தக்காளி நன்கு வதங்கியதும் துருவிய கேரட் சேர்த்து ஐந்து வதக்கவும்.

  7. 7

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  8. 8

    பின்னர் முட்டைகளை சேர்த்து நன்கு வதக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும். பின்னர் மல்லி இலை தூவினால் முட்டை மசாலா தயார்.

  9. 9

    பின்னர் பட்டர் தடவி வைத்துள்ள பிரட்டின் மேல், தயார் செய்து வைத்துள்ள முட்டை மசாலாவை வைத்து ஸ்டப் செய்து, அதன் மேல் ஒரு பிரட்டை வைத்துஅழுத்தி, பிரட் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான முட்டை மசாலா பிரட் டோஸ்ட் தயார்.

  10. 10

    பிரட் நன்கு டோஸ்ட் ஆனதும் எடுத்தால் சுவையான முட்டை மசாலா பிரட் சுவைக்கத் தயார்.

  11. 11

    தயாரான பிரட் டோஸ்ட்டை எடுத்து முக்கோண வடிவில் கட் செய்து, ஒரு பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கவும்.

  12. 12

    இப்போது மிகவும் சுவையான முட்டை மசாலா பிரட் சுவைக்கத் தயார். இதை ஒரு டயட் உணவாகவும் சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes