வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)

#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰
சமையல் குறிப்புகள்
- 1
இந்த மாதிரி சவர்மா., ரோல் மாதிரி செய்ய முந்தின நாள் ஒரு வெண்டைக்காய ஒரு டம்ளர் தண்ணீர்ல போட்டு வச்சுடுங்க... மறுநாள் அந்த வெண்டைக்காய எடுத்துட்டா., அது பேரு வெண்டைக்காய் ஸ்லைம்... மாவு பிசையும் போது உப்பு போட்டு கிளறி., மொதல்ல இந்த தண்ணீர் சேர்த்து பிசையனும்...
அப்பறம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையனும்...சப்பாத்தி மாவு பதம் தான்..
குறைஞ்சது 2 மணி நேரம் அதிகபட்சம் 5 மணி நேரம் ஊற வச்சுக்கலாம் அப்போ ரொம்ப ரொம்ப soft ஆ இருக்கும்.
- 2
காய்கறிகள நீள நீளமா வெட்டிக்கோங்க...
கடாய்ல தேவைக்கேற்ப வெண்ணெய் விட்டுக்கோங்க...
- 3
அந்த வெண்ணெய் உருகினதும்., மிளகாய் பொடி, உப்பு, மாங்காய் பொடி, கரம் மசாலா பொடி, போட்டு கிளறி காய்கறி போட்டு வதக்கனும்.. எல்லா காயும் வதங்கின பிறகு
பன்னீர் கடைசியாக போட்டு பொத்துனாப்ல வதக்கி இறக்கி வச்சுக்கோங்க. - 4
பிசைஞ்ச மாவுல சப்பாத்தி தட்டி சுட்டு எடுத்துக்கோங்க. சப்பாத்தி மேல மையோனைஸ்ம் தக்காளி சாஸும் சேர்த்து தடவி நம்ம காய்கறிகளை வச்சு உருட்ட வேண்டியது தான்..
இந்த மையோனைஸும், சாஸும் வீட்ல செஞ்சது தான்.. அதுக்கு அப்பறமா செய்முறை பதிவு செய்றேன்.
- 5
பட்டர் பேப்பர விரிச்சு அது மேல நம்ம சவர்மாவ வச்சு சுத்தி கீழ அந்த ஓட்டைக்குள்ள மடிச்சு விட வேண்டியது தான்...
இந்த பட்டர் பேப்பரும் நான் வீட்லயே செஞ்சுகிட்டேன்... (இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆமா... அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது😂😂😂😂) ஆனா நான் என்னங்க பண்றது... இதெல்லாம் என்னைக்காவது ஆசைக்கு நம்ம வீட்ல அரங்கேரும்.. அதுக்காக நான் பட்டர் சீட்ட வாங்கி காவந்து பண்ண முடியுமா? அதான் அப்போ அப்போ வேணுங்கறது செஞ்சு பயன்படுத்திக்கிறேன்
- 6
சுவையான வீட் பன்னீர் சவர்மா தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
#queen1 நம்ம வீட்ல அடை தோசையும் முறுகலா தான் வேணும்னு நிப்பாங்க... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்றது தான நமக்கு சந்தோசம்... Tamilmozhiyaal -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
முட்டை ரோல் Bengali recipe (Egg Roll Recipe in Tamil)
கொல்கத்தா செய்முறையில் பெரும்பாலும் பால் வகைகளுக்கு முக்கியத்துவம் இரண்டாவது மீன் மீனவர்களுக்கு சைவம் மீன் சமையல்தான் செய்ய ஆசை விரத நாட்களாக இருப்பதால் செய்ய இயலவில்லை இன்று மீன் கிடைக்கவில்லை அதனால் இந்எக் ரோல் செய்கிறேன் பெரும்பாலும் கடுகு கடுகு சார்ந்த பொருட்கள் தான் எண்ணெய் உட்பட சேர்த்து சமைத்தால் அது எந்த வகை குழம்பா இருந்தாலும் எக் ரோல் தெருக்கடை உணவு மிகவும் பிடித்திருந்தது அதனால் இதையே செய்கின்றேன்#goldanapron2 Chitra Kumar -
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
-
More Recipes
கமெண்ட் (2)