சீரக சம்பா மலபார் முட்டை தம்பிரியாணி (Seeraga Samba Malabar egg dumbriyani recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
முட்டையை வேகவைத்து தோல் உரித்து இரண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 3
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
ஒரு வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
ஸ்டவ்வில் தவாவை வைத்து மசாலாப் பொருள்களை வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்து தயாராக வைக்கவும்.
- 7
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய்,எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை, முந்திரி சேர்த்து பொரிந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கவும்.
- 8
இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலக்கவும். உடனடியாக தண்ணீரில்,பாதி உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் அளவு சரியாக இருக்கும்.
- 9
பத்து நிமிடங்கள் வேக விடவும். பின்னர் எடுத்து கலந்து வேறு ஒரு தட்டில் சேர்த்து ஆற வைக்கவும்.
- 10
அதே பாத்திரத்தில் நெய் சேர்த்து பட்டை,கிராம்பு, ஏலக்காய்,முந்திரி சேர்த்து வதக்கி,நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள், உப்பு சேர்த்து வத்கவும்.
- 11
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.
- 12
அத்துடன் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
- 13
பின்னர் பொடித்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.
- 14
மசாலா கலவையுடன் நறுக்கிய மல்லி,புதினா, வேகவைத்து வைதுள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் முட்டையை மசாலா வைத்து மூடி வேக விடவும்.
- 15
பின்னர் முட்டை மசாலாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 16
நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு லேயர் வேக வைத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து,அதன் மேல் முட்டை மசாலாவை சேர்க்கவும்.
- 17
மேலும் ஒரு லேயர் சாதத்தை சேர்த்து,அதன் மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து,முந்திரி,நெய் தூவி மூடி வைத்து,தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து அதன் மேல் வைக்கவும்.
- 18
பதினைந்து நிமடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து எடுத்து கலந்தால் சுவையான சீரக சம்பா அரிசியில் செய்த மலபார் முட்டை தம் பிரியாணி தயார்.
- 19
தயாரான பிரியாணியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து,வெங்காயம் தக்காளி ரைத்தாவுடன் சுவைக்கவும்.
- 20
இப்போது மிக மிக சுவையான சீரக சம்பா மலபார் தம் பிரியாணி சுவைக்காத்தயார்.
- 21
இது ஒரு நீளமான செய் முறை,ஆனால் சுவை அபாரமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி (Seeraga samba chichen biryani Recipe in Tamil)
#deeshas amrudha Varshini -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
-
-
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
-
சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
-
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட. Laxmi Kailash -
-
-
-
-
சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)
சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #steam Lakshmi Sridharan Ph D -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun)
கமெண்ட் (2)