சேமியா ரவா மசாலா கிச்சிடி (Semiya rava masala kichadi recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் சேமியா
  2. 1/2 கப் வெள்ளை ரவை
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2வற்றல் மிளகாய்
  6. 10 பீன்ஸ்
  7. 1 கேரட்
  8. 1/4 கப் பச்சை பட்டாணி
  9. 1/4 கப் காலிஃப்ளவர்
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  12. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. தேவையான அளவுஉப்பு
  14. 2டேபிள் ஸ்பூன் முந்திரி
  15. 3 டேபிள் ஸ்பூன் நெய்
  16. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  17. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கிச்சிடி தயார் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    வெங்காயம்,மிளகாய், தக்காளி,காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    எல்லாம் சேர்த்து நன்கு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய்,இஞ்சி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் அத்துடன் சேமியா,ரவை சேர்த்து வறுக்கவும்.

  6. 6

    அதன் பின் கொஞ்சம் நெய், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  7. 7

    அத்துடன் சூடான தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.

  8. 8

    மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, முந்திரி சேர்த்து, மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.

  9. 9

    பின்னர் எடுத்து ஒரு பௌலில்,பரிமாறும் தட்டில் சேர்க்கவும்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

  10. 10

    இப்போது மிகவும் அருமையான சுவையில் சேமியா ராவ் மசாலா கிச்சிடி சுவைக்கத்த்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes