பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#birthday3

இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது

பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)

#birthday3

இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் பலாக்கொட்டை
  2. 1 கப் ஊறவைத்த பயறுகள்
  3. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  4. 1 ஸ்பூன் கடுகு
  5. 1 ஸ்பூன் சோம்பு
  6. 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  7. 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. தேவையான அளவுகல் உப்பு
  9. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. மசாலா அரைக்க:
  11. 1 கப் சின்ன வெங்காயம்
  12. 4 தக்காளி
  13. 1 ஸ்பூன் சோம்பு
  14. 1 ஸ்பூன் சீரகம்
  15. 15 பல் பூண்டு
  16. 1 துண்டு இஞ்சி
  17. சிறிதுகறிவேப்பிலை
  18. 1 மூடி தேங்காய்
  19. சிறிதுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பலாக்கொட்டையை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும் பின் பயறுகளை 12 மணி நேரம் வரை ஊறவிடவும் (நான் கருப்பு சுண்டல் தட்டபயறு ராஜ்மா பட்டாணி மொச்சை கலந்து ஊறவைத்திருக்கிறேன்)

  2. 2

    பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்

  3. 3

    பின் வேகவைத்த பலாக்கொட்டை மற்றும் பயறு உடன் அரைத்த விழுதை சேர்த்து சாம்பார் பொடி கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான பலாக்கொட்டை பயறு குழம்பு ரெடி வாரத்திற்கு ஒரு நாள் இந்த மாதிரி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது கால்சியம் சத்து புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு விருப்பபட்டா இது கூட காய்கறிகள் சேர்த்து செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes