ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

#6

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1ப்ரோக்கோலி
  2. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. தேவையான அளவுஉப்பு
  4. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 1பட்டை
  7. 4கிராம்பு
  8. 3ஏலக்காய்
  9. 2வெங்காயம்
  10. 2தக்காளி
  11. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. 4 ஸ்பூன் பட்டர்
  13. 6 முந்திரி பருப்பு
  14. 8 பாதாம் பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ப்ரோக்கோலி போட்டு, இரண்டு நிமிடம் வைத்து, கழுவி எடுத்து, தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் போட்டு நீரில்லாமல் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பட்டை,கிராம்பு ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

  3. 3

    அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் பட்டர் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து,சிறு தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

  4. 4

    இப்போது தண்ணீர் இல்லாமல் வதக்கி வைத்த ப்ரோக்கோலி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு 5 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

  5. 5

    ப்ரோக்கோலி வெந்து நன்கு கிரேவி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி பரிமாறலாம் சுவையான ப்ரோகோலி பட்டர் மசாலா தயார்.😋🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes