பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பேருக்கு பரிமாறலாம்
  1. 3/4 லிட்டர் பாலில் செய்த பன்னீர்
  2. 1/2 கப் பச்சை பட்டாணி
  3. 4 பெரிய வெங்காயம்(1 தாளிக்க)
  4. 8 தக்காளி (1 தாளிக்க)
  5. 4 துண்டு பட்டை
  6. 6 கிராம்பு
  7. 2 ஸ்பூன் சோம்பு
  8. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 2 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
  11. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  12. 3/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2 ஸ்பூன் தேங்காய்
  15. 5 முந்திரி
  16. 2 ஸ்பூன் கசகசா
  17. 3 ஸ்பூன் வெண்ணெய்
  18. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசா இரண்டையும் ஊற வைத்துக் கொள்ளவும். பன்னீரை தோசைக்கல்லில் போட்டு பிரை செய்யவும்.

  2. 2

    பெரிய வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மசாலா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் வெண்ணைசேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து 1 வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    இஞ்சி பூண்டு வதங்கிய பின் 1 தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 3 பெரிய வெங்காயம், ஏழு தக்காளியை வதக்கி ஆறியபின் விழுதாக அரைத்து மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    நன்கு வதங்கியவுடன் வேக வைத்த பச்சைப் பட்டாணியை சேர்க்கவும்.இப்பொழுதுகசகசா, முந்திரி, தேங்காய் அரைத்து சேர்க்கவும். தேங்காய் விழுது நன்கு கொதித்த உடன் பன்னீர் சேர்க்கவும்.

  6. 6

    கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes