காசி அல்வா(kasi halwa recipe in tamil)

இது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
இது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை கழுவி தோல் சீவி கொள்ளவும்
- 2
பின் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி விதையை நீக்கி விட்டு துருவி கொள்ளவும்
தண்ணீரை பிழிய வேண்டாம் அந்த தண்ணீர் உடனே அழுத்தி அளந்து கொள்ளவும்
- 3
குங்குமப்பூவை வெதுவெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
அளந்த பூசணிக்காயை குக்கரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே மூடி வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் திறந்து கொள்ளவும்
இந்த அல்வா கிளற 1 மணி நேரம் ஆகும் இந்த குக்கரில் போடுவதால் கொஞ்சம் கிளறும் நேரம் 25_30 நிமிடங்கள் குறையும் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம் பூசணிக்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது
- 5
பின் வாணலியில் நெய் சிறிது விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்
- 6
பின் பொன்னிறமாக முந்திரியை வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு வேகவைத்த பூசணிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
இடை இடையே சிறிது நெய் விட்டு பத்து நிமிடம் வரை தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- 8
தண்ணீர் எல்லாம் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பூசணிக்காயை அளந்த அதே கப்பில் 3/4 கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும்
சர்க்கரை கரைந்து இளகி வரும் கைவிடாமல் கிளறி விடவும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும்
- 9
பின் குங்குமப்பூ கரைசலை ஊற்றவும் நான் கலர் எதுவும் சேர்க்கவில்லை குங்குமப்பூவே நல்ல கலர் மற்றும் மணம் கொடுக்கும்
- 10
தொடர்ந்து கைவிடாமல் கிளறி விடவும்
- 11
சர்க்கரை முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்ததும் முதலில் இளகி பின் கெட்டியாகும் அப்போது 1/4 லெமன் ஃபீஸ் 1 ஸ்பூன் லெமன் சாறு விடவும் இது சர்க்கரை தொடர்ந்து கிளறும் போது கிறிஸ்டல் ஆகாம இருக்க உதவும்
பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கவும்
- 12
சூடான நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்
- 13
முதலில் ஊற்றிய நெய் முழுவதும் உள்ளே இழுத்த பிறகு மீண்டும் நெய்யை ஊற்றவும் தொடர்ந்து சூடாக்கி கொண்டே ஊற்றவும் அதாவது சூடான நெய்யை ஊற்றி கிளறவும் 3 முறையாக பிரித்து சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்
- 14
பின் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கிளறவும்
- 15
ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்
- 16
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் ரொம்ப கெட்டியா கிளறி எடுக்க வேண்டாம் தளதளன்னு சைடு எல்லாம் ஒட்டாம பாத்திரத்தில் சுழண்டு வரும் அதுவே பதம் கரண்டியில திருப்பி விடும் போது தண்ணீர் வராது அதுதான் சரியான பதம் அந்த பதத்தில் இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 17
தளதளவென்று இருக்கும் போது எடுத்தா ஆறும் போது சரியாக இருக்கும் முதலிலே கெட்டியாக எடுத்தா கல் மாதிரி ஆகி விடும்
- 18
கரண்டியில் எடுத்து போடும் போது ஒட்டாம விழுக வேண்டும்
- 19
பதம் பார்த்தாலே தெரியும் அல்வாவை வாணலியில் மாற்றி கிளறும் போது பூசணிக்காயை கிளறும் போது மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும் பின் சர்க்கரை சேர்த்த பிறகு இறக்கும் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும் அது தான் சரியான பதத்தில் இருக்கும்
- 20
சூப்பரான காசி அல்வா ரெடி கல்யாண வீட்டு ஸ்பெஷல்
- 21
சுவையான ஆரோக்கியமான எளிதான காசி அல்வா பூசணிக்காய் அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)