ரோட் சைட் காளான்(roadside kalan recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 1/2 கப் காளான் பொடியாக நறுக்கியது
  2. 1 1/2 கப் முட்டை கோஸ் பொடியாக நறுக்கியது
  3. 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  4. 2 டேபிள்ஸ்பூன் மைதா
  5. 2 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி சில்லி தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 1+1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  9. 1 தக்காளி (விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்)
  10. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காளான் மற்றும் முட்டை கோசு இவற்றுடன் சோள மாவு மைதா மாவு சில்லி தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை வடை போல தட்டி போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் சிட்டிகை கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும் 2 டேபிள்ஸ்பூன்

  4. 4

    சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு பொரித்த உருண்டைகளை சேர்த்து கிளறி விடவும். நன்கு சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து வெங்காயம் கார்ன் பிளேக்ஸ் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes