முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#LB

முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)

#LB

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
1/2 கிலோ
  1. 5 கப் முருங்கை கீரை
  2. 200 கிராம் கருப்பு உளுந்து
  3. 50 கிராம் கடலைப் பருப்பு
  4. 2 டேபிள்ஸ்பூன் மல்லி
  5. 2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  6. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  7. 8 _12 வரமிளகாய்
  8. 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு
  9. 50 கிராம் காய்ந்த பூண்டு
  10. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை கீரையை சுத்தம் செய்து அலசி துணியில் பரப்பி நிழலில் உலரவிடவும் பின் வெறும் வாணலியில் மணம் வர வறுத்து எடுக்கவும்

  2. 2

    பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் வெறும் வாணலியில் உளுந்து கடலைப்பருப்பு மல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    பின் உப்பு புளி பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்

  4. 4

    பின் அதனுடன் ஏற்கெனவே பொடி செய்து வைத்துள்ள முருங்கை இலையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்

  5. 5

    இதை சூடான சாதத்தில் இரண்டு கரண்டி பொடியை தூவி சூடான நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து கத்தரிக்காய் உருளைக்கிழங்கு வாழைக்காய் சேனைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தா செமயா இருக்கும்

    இட்லி தோசை க்கும் நன்றாக இருக்கும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான மணமான முருங்கை கீரை பொடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes