ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

ஹோட்டல் முறையில் செய்யக்கூடிய ஆட்டுக்கறி 65 ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. தேவையான அளவுபொறிக்க எண்ணெய்
  2. ஆட்டுக்கறியுடன் சேர்த்து வேக வைக்க தேவையானவை:
  3. 1/2 கிலோ மட்டன்
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/2மேஜேக்கரண்டி உப்பு
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 கப் தண்ணீர்
  8. வறுத்து அரைக்க:
  9. 1 மேஜை கரண்டி சோம்பு
  10. 1/2 தேக்கரண்டி மிளகு
  11. 1 தேக்கரண்டி சீரகம்
  12. 3 காய்ந்த மிளகாய்
  13. ஊற வைக்க தேவையான மசாலா:
  14. 1 சிட்டிகை சிவப்பு கலர்
  15. 1.5மேஜைக் கரண்டி சோள மாவு
  16. 1.5 மேஜை கரண்டி அரிசி மாவு
  17. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  18. 1மேஜைக் கரண்டி தயிர்
  19. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  20. தேவையானஅளவு உப்பு
  21. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  22. 1தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
  23. 1/2 தேக்கரண்டி மல்லி தூள்
  24. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  25. 1மேஜைக் கரண்டி வினிகர்
  26. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எலும்பில்லாத ஆட்டுக்கறியை கழுவி தண்ணீர் வடித்து இதோடு உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் சிறுத்தியில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பின் தண்ணீர் அதிகமாக இருந்தால் சுண்ட வைத்துக் கொள்ளவும். இரண்டு மேஜை கரண்டி தண்ணீருடன் மசாலாவை சேர்த்து கலந்தால் சரியாக இருக்கும் மீதமான தன்மையை மற்ற வைக்கவும்.

  2. 2

    ஒரு பேனை சூடு செய்து அதில் மிளகு சோம்பு, சீரகம் இவற்றை சேர்த்து சிறு தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும்‌ இதோடு காய்ந்த மிளகாய் சேர்க்கவும். கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கறியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் மசாலா ஊற வைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    இதோடு எலுமிச்சை சாறு மற்றும் சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து கலந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  5. 5

    நன்றாக ஊறிய கறி துண்டுகளை சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும்.

  6. 6

    ஹோட்டல்களில் சாப்பிட கூடிய அதே சுவையில், மொறுமொறுப்பாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes