மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#TheChefStory #ATW3
மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4பேர்
  1. 1கப் வெள்ளை சுண்டல்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1ஸ்பூன் துருவிய இஞ்சி
  5. 1ஸ்பூன் துருவிய பூண்டு
  6. 1டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  7. 3கிராம்பு
  8. 1ஸ்பூன் சீரகம்
  9. 1கருப்பு ஏலக்காய்
  10. 1இன்ச் பட்டை
  11. 1ஸ்பூன் கரம் மசாலா
  12. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1மிளகாய்
  15. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  16. 2ஸ்பூன் மல்லி தழை
  17. 3ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
  18. 1/2ஸ்பூன் ஒரிகனோ

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    1கப் சுண்டலை,மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும்,துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். பின்,மல்லிவிதை,பட்டை,கிராம்பு,சீரகம்,ஏலக்காய்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    மேலும் 1கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு,அனைத்து பொருட்களும் நன்றாக மாசியும் படி வதக்கவும்.மல்லி விதையை நன்கு அழுத்தி விட்டு(அல்லது இடித்து சேர்க்கவும்) வதக்கவும்.

  6. 6

    பின் இதனுடன் வேக வைத்த சுண்டல் மற்றும் வடித்த தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் மிளகாய்,மிளகு தூள் சேர்த்து 10நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

  7. 7

    நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    பின்,Basil/rosemary/ origano லேசாக தூவி பரிமாறலாம்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான, மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி ரெடி. இது சப்பாத்தி, நாண், ப்ரெட் இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes