தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 150கிராம் துவரம் பருப்பு
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 1/2 கப் சின்ன வெங்காயம்
  4. 100கிராம் வெண்டைக்காய் கட் செய்தது
  5. 2 கத்தரிக்காய் கட் செய்தது
  6. 2டேபிள் ஸ்பூன் சாம்பார் பௌடர்
  7. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1டேபிள் ஸ்பூன் நெய்
  9. 2டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல்
  10. 2டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் துருவல்
  11. 1/4கப் சின்ன வெங்காயம்
  12. 2 தக்காளி பொடியாக கட் செய்தது
  13. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. 1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  15. சிறிதளவுகறிவேப்பிலை
  16. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  17. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வகைகளை கழுவி மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் நெய் விட்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தேங்காய் சேர்த்து வதக்கி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின் கத்தரிக்காய் சேர்த்து, சாம்பார்த்தூள், உப்பு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    காய்கள் வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும். இதை பருப்புடன் சேர்த்து கலந்து தேங்காய் விழுது சேர்த்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும் பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes