கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#sr
கீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)

#sr
கீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3பேர்
  1. 1கட்டு கீரையில் உள்ள தண்டு
  2. 1/2ஸ்பூன் மிளகு
  3. 1ஸ்பூன் சீரகம்
  4. 1டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  5. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  6. 1தக்காளி
  7. 1துண்டு பட்டை
  8. 1/2இன்ச் இஞ்சி
  9. 10-15சின்ன வெங்காயம்
  10. 5பூண்டு
  11. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    கீரைத் தண்டைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.நான் அரைக்கீரை எடுத்துள்ளேன். தண்டு கீரை,சிறுகீரை, பாலக் கீரையின் தண்டுகளையும் பயன்படுத்தலாம்.

  3. 3

    மிக்சி ஜாரில் மிளகு,
    சீரகம்,பெருஞ்சீரகம், மல்லி விதை சேர்த்து அரைக்கும் போது அரைபடாது.அதனுடன்,வெங்காயம்,பூண்டு,
    இஞ்சி சேர்த்து கொரொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.வதங்கியதும்,கீரைத் தண்டு சேர்த்து கலந்து விட்டு,700ml அளவு தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    பின் குக்கர் மூடி போட்டு 5விசில் விட்டு இறக்கவும்.ஆவி அடங்கியதும், வடிகட்டவும்.இன்னும் கசடுகள் இருந்தால் சிறு துளையிட்ட வடிகட்டியில் மீண்டும் வடிகட்டி கொள்ளவும்.

  7. 7

    மீண்டும் இதை அடுப்பில் வைத்து மிளகு தூள் சேர்த்து, உப்பு சரி பார்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறலாம்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான கீரைத் தண்டு சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes