செட்டிநாடு காளான் கிரேவி(chettinadu mushroom gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 200கிராம் பட்டன் காளான் கட் செய்தது
  2. வறுத்து அரைக்க :
  3. 1டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  4. 1/2டீஸ்பூன் சீரகம்
  5. 1டீஸ்பூன் சோம்பு
  6. 1பிரியாணி இலை
  7. 2டேபிள் ஸ்பூன் மிளகு
  8. 3 வரமிளகாய்
  9. 1சிறு அன்னாசிப்பூ
  10. 2 பட்டை, 4இலவங்கம், ஏலக்காய்
  11. 1/4கப் தேங்காய் துருவல்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. 2டேபிள் ஸ்பூன் நெய்
  15. 12 முந்திரி நைசாக அரைத்தது
  16. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  17. சிறிதளவுகறிவேப்பிலை
  18. 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  19. 1/2கப் சின்ன வெங்காயம் பொடியாக கட் செய்தது
  20. 1 தக்காளி பொடியாக கட் செய்தது
  21. 1/2டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  22. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாக பொடி செய்து வைக்கவும். தேங்காயையும் வறுத்து பொடித்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பின் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

  4. 4

    வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து முந்திரி விழுது சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் நெய் சேர்த்து மூடி சிம்மில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும்.

  5. 5

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, நான் போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes