சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#Cookpadturns6
பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  1. 4 துண்டுகள்வீட் ஹக்கா நூடுல்ஸ்
  2. 1மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 1மஞ்சள் குடமிளகாய்
  4. 1பச்சை குடமிளகாய்
  5. 1/2 பகுதிகோஸ்
  6. 1கேரட் பெரியது
  7. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின பூண்டு
  8. 1 டேபிள் ஸ்பூன்சோயா சாஸ்
  9. 2 டேபிள் ஸ்பூன்ரெட் சில்லி சாஸ்
  10. 1 டேபிள் ஸ்பூன்டமேட்டோ சாஸ்
  11. 2 ஸ்பூன்சர்க்கரை
  12. ருசிக்குஉப்பு
  13. 2 ஸ்பூன்மிளகு தூள்
  14. 3 1/2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  15. தேவையான அளவுதண்ணீர்
  16. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை நறுக்கினது
  17. அலங்கரிக்க:-
  18. வட்டமாக நறுக்கின கேரட் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், ப.குடமிளகாய், ம.குடமிளகாய், கோஸ், கேரட் அனைத்தையும், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பூண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், நூடுல்ஸ் மூழ்கும் அளவிற்கு மேல், தண்ணீர்,1ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்ததும், நூடுல்ஸை உடைக்காமல் சேர்க்கவும்.

  4. 4

    70% நூடுல்ஸ் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  5. 5

    பிறகு வடிகூடையில் வடியவிட்டு, மேலே குளிர்ந்த தண்ணீர் சிறிது சேர்த்து, வடித்ததும்,1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்கு குலுக்கி விடவும்.

  6. 6

    அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், பூண்டை நன்கு வதக்கவும்.

  7. 7

    வதங்கியதும், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

  8. 8

    அடுத்து, நறுக்கின, காய்கறிகள், சர்க்கரை, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.(காய்கறிகள் அதிகம் வேகக் கூடாது)

  9. 9

    பிறகு நூடுல்ஸீடன், டமேட்டோ சாஸ், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ் சேர்க்கவும்.

  10. 10

    சேர்த்ததும், உடையாமல் கிளறி, மிளகு தூள் சேர்த்து, 1 நிமிடம் ஆனதும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  11. 11

    பிறகு, கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி விடவும்.

  12. 12

    இறக்கினதும், ஒன்று சேர கிளறி, தட்டிற்கு மாற்றவும்.

  13. 13

    இப்போது, சுவையான, சுலபமான, சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா வெஜ் நூடுல்ஸ்*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

  14. 14

    குறிப்பு:- 200 கி நூடுல்ஸ் சேர்த்தால், 150திலிருந்து 200கி காய்கறிகளின் அளவு இருக்க வேண்டும். காய்கறிகளை வதக்கும் போது, அடுப்பை ஹையில் வைத்தே வதக்க வேண்டும். காய்கறிகள் அதிகம் வதங்கக் கூடாது. ஸ்பிரிங் ஆனியன் இல்லாததால், கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொண்டேன்.சுவை அபாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes