*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பேர்
  1. 1/2 கிவெண்டைக்காய்
  2. 3/4 டீ ஸ்பூன்ம.தூள்
  3. 1 ஸ்பூன்தனி மி.தூள்
  4. 1 ஸ்பூன்கறிப் பொடி
  5. ருசிக்குஉப்பு
  6. தாளிக்க:-
  7. 1 டீ ஸ்பூன்கடுகு
  8. 1 ஸ்பூன்உ.பருப்பு
  9. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  10. 3 ஸ்பூன்எண்ணெய்
  11. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெண்டைக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  4. 4

    தாளித்ததும், நறுக்கின வெண்டைக்காய், ம.தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பிறகு கறிப் பொடி போட்டு 2 நிமிடம் ஒன்று சேர கிளறி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

  6. 6

    இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.

  7. 7

    இப்போது, சுவையான, சுலபமான,*வெண்டைக்காய் பொடிக் கறி*தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes