கிரீன் பீஸ் பூரி

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#குழந்தைகள் டிபன் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம்

கிரீன் பீஸ் பூரி

#குழந்தைகள் டிபன் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் பச்சை பட்டாணி
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1/2டீஸ்பூன் உப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் ரவை
  6. 1/8டீஸ்பூன் சர்க்கரை
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/4டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/4டீஸ்பூன் மல்லி தூள்
  10. கொத்தமல்லி தழை - சிறிது
  11. 1டீஸ்பூன் நெய்
  12. பொரிக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பட்டாணியை தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    பின் மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து கொள்ளவும்
    பின்னர் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு

  3. 3

    கோதுமை மாவு, அரைத்த விழுது, ரவை, உப்பு, நெய், சர்க்கரை,மஞ்சள் தூள், சீரகத்தூள்,மல்லி தூள்,
    கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்த்து பிசையவும்

  5. 5

    மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி பூரிகளாக தேய்த்து கொள்ளவும்

  6. 6

    எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூரிகளாக போட்டு பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes