வல்லாரைக்கீரை சாதம், வாழைத்தண்டு பச்சடி

Subha Senthil
Subha Senthil @cook_17262162

#குழந்தைகள்டிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. உதிராக வடித்த பாஸ்மதி அரிசி சாதம் -2 கப்
  2. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்
  4. சுத்தம் செய்து கழுவிய வல்லாரைக்கீரை - 2 கப்
  5. புதினா, கொத்தமல்லி இலைகள் - 1/2 கப் (இரண்டும் சேர்த்து)
  6. இஞ்சி -2 டீஸ்பூன் (தோல்நீக்கி நறுக்கியது)
  7. துறுவிய தேங்காய் - 1/4 கப்
  8. கட்டித் தயிர் -2 கரண்டி
  9. மிளகு - 3 டீஸ்பூன்
  10. கரம் மசாலாத்தூள் -1 1/2 டீஸ்பூன்
  11. சீரகம் - 1 டீஸ்பூன்
  12. நெய் - 3 டேபிள்ஸ்பூன்
  13. உப்பு -தேவைக்கேற்ப
  14. பச்சடிக்கு : பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்த வாழைத்தண்டு - 1 1/2 கப்
  15. கட்டித்தயிர் - 300 மில்லி
  16. சீரகம் -1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -1, இஞ்சி -சிறு துண்டு, தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் அனைத்தும் சிறிது தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  17. உப்பு -தேவைக்கேற்ப
  18. சர்க்கரை -1 டீஸ்பூன்
  19. தாளிக்க : வரமிளகாய் -1, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,மற்றும் கறிவேப்பிலை - சிறிதளவு
  20. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1/2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் வல்லாரைக்கீரை, புதினா,கொத்தமல்லி, தயிர், இஞ்சி, துறுவிய தேங்காய், மிளகு, கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைப்போட்டு மைய அரைக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் அரிந்த வெங்காயம், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் அரைத்த விழுதினைச் சேர்த்து நெய் நன்கு பிரிந்து மேலே வரும்வரை சிறுதீயில் வதக்கவும்.

  3. 3

    உதிராக வடித்து ஆறவைத்த சாதம், கொத்தமல்லி இலைகள் தூவி விழுதுடன் கலக்கவும்.

  4. 4

    பச்சடிக்கு : கட்டித் தயிரில் உப்பு, சர்க்கரை, வேகவைத்த வாழைத்தண்டு, அரைத்த விழுது ஆகியவற்றைக் கலக்கவும். தாளிப்புப் பொருட்களை 1 டீஸ்பூன் எண்ணையில் தாளித்து கொத்தமல்லி இலை தூவிப் பறிமாறவும்.

  5. 5

    #மிகமுக்கியம் : வல்லாரைக்கீரையை அரைப்பதற்கு #தயிர் மட்டுமே சேர்க்கவும், புளி/எலுமிச்சம்பழம் சேர்க்கவே கூடாது. இவையிரண்டும் கீரையுடன் சேர்ந்தால் நம் உடலில் எதிர்வினையாற்றும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subha Senthil
Subha Senthil @cook_17262162
அன்று

Similar Recipes