சோயா பிரியாணி (soya Biryani REcipe in Tamil)

Sahana D
Sahana D @cook_20361448

சோயா பிரியாணி (soya Biryani REcipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்க்கு பரிம
  1. 2வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1பட்டை
  4. 1லவங்கம்
  5. 1ஏலக்காய்
  6. 1பிரிஞ்சி இலை
  7. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1 ஸ்பூன்தயிர்
  11. சிறிதளவுபுதினா
  12. எண்ணெய்
  13. உப்பு
  14. 2 ஸ்பூன்நெய்
  15. சிறிதளவுகொத்தமல்லி இலை
  16. 1 கப்சோயா
  17. 7முந்திரி
  18. 1கிளாஸ்பாஸ்மதி அரிசி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு பிறகு முந்திரி போடவும்

  2. 2

    அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் புதினா சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    5 நிமிடம் வதங்கிய பின் சுடு நீரில் 15 நிமிடம் வேக வைத்த சோயாவை இறுக்கி பிழிந்த பிறகு சேர்க்கவும்

  4. 4

    அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் தயிர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பிறகு 1 கிளாஸ் பாஸ்மதி அரிசிக்கு 1கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் நன்கு கொதித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை போடவும் கொத்தமல்லி இலை போட்டு குக்கரை மூடி வைத்து 2 விசில் விடவும்

  5. 5

    விசில் அடங்கிய பிறகு 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும். சுவையான சோயா பிரியாணி ரெடி. சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes