நெய் சோறு (ghee rice)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

நெய் சோறு (ghee rice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பாஸ்மதி அரிசி - 500 கி
  2. வெங்காயம் - 2
  3. கொத்தமல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
  4. புதினா - 2 மேஜைக்கரண்டி
  5. மிளகாய்
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  8. நெய் - 4 மேஜைக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  10. தயிர் 1 தேக்கரண்டி
  11. பிரியாணி இலை 1
  12. ஏலக்காய் 4
  13. நட்சத்திர சோம்பு - 1
  14. பட்டை சிறிய துண்டு
  15. கிராம்பு - 2

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முதலில் தேங்காய் எண்ணெய் விட்டு காயவிடவும். பின் நெய் எண்ணெய் விட்டு சூடானதும் வாசனை பொருட்கள் சேர்க்கவும்.

  2. 2

    மெல்லியதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வருவதர்கு முன்னர் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இபு வாசனை போனதும் கொத்தமல்லி இலை மிளகாய் புதீனா சேர்த்து வதக்கி 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    தண்ணீர் கொதித்ததும் அரிசி போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து குறைந்த தீயில் வைத்து தண்ணீர் வற்றியதும் 10 நிமிடம் மூடி வைக்கவும். அரிசி வெந்ததும் 1 தேக்கரண்டி தயிரை ஆங்காங்கே போட்டு நன்றாக பிரட்டி விட்டு 5 நிமிடம் தம் இல் போட்டு அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    நெய் சோறு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes