பருப்பு பாயசம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Lockdown2
இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் .

பருப்பு பாயசம்

#Lockdown2
இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
4 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1/2 கப் கடலை பருப்பு
  3. 1 1/4 கப் வெல்லம்
  4. 3 ஏலக்காய்
  5. 1 கப் பால்
  6. தண்ணீர்
  7. 5டீஸ்பூன் நெய்
  8. 10 முந்திரி
  9. 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    பாசிப்பருப்பு 1 கப்,கடலை பருப்பு 1/2 கப் எடுத்து வெறும் கடாயில் லேசாக வறுத்து வைக்கவும்.முந்திரி 10 எடுத்து உடைத்து வைக்கவும்.

  2. 2

    பால் 1 கப் காய்ச்சி ஆறவிடவும். ஏலக்காய் 3 எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  3. 3

    வெல்லம் 1 1/4 கப் எடுத்து பொடித்து வைக்கவும்.வறுத்த பருப்பை கழுவி குக்கரில் 3 விசில் வேக விடவும்.வெந்த பருப்பில் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.சேர்த்து கலக்கி கிளறி விடவும்.

  4. 4

    கடாயில் நெய் 5 டீஸ்பூன் சேர்த்து முந்திரி தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதில் ஏலக்காய் சேர்த்து பருப்பில் சேர்க்கவும்.கலக்கி விட்டு பால் 1 கப் சேர்க்கவும்.

  5. 5

    கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.சுவையான பருப்பு பாயசம் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
sooper..but nan oru spoon pakkam dhan kadalai paruppu serpen.no thenkai.but ur recipe is yummy even to read.will try ur recipe one viratha day.then I will send u my feedback

Similar Recipes