பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
#arusuvai1
#ilovecooking

பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)

இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
#arusuvai1
#ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப் அரிசி மாவு
  2. ஒரு கப் சர்க்கரை
  3. 3ஏலக்காய்
  4. தேங்காய்
  5. உப்பு
  6. அரை கப் பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப்அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்க வைத்து அந்த மாவில் ஊற்றவும்.

  2. 2

    உப்பு,தண்ணீர் சேர்த்து பிறகு அந்த மாவை நன்கு பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவில் சிறு சிறு உருண்டைகளை உருட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.அந்த பால் கொதித்த பிறகு உருட்டிய உருண்டைகளை அதில் போடவும். அந்த உருண்டைகள் நன்கு வெந்த பிறகு தேவையான அளவு சர்க்கரையை சேர்க்கவும்.

  4. 4

    இரண்டிலிருந்து மூன்று ஏலக்காயைத் தட்டி சேர்க்கவும்.கடைசியில் தேங்காய் துருவலை சேர்க்கவும். இப்பொழுது சுவையான செட்டிநாடு பால் கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes