பூண்டு குழம்பு

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்

பூண்டு குழம்பு

#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் பூண்டு பல்
  2. 1நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 1நறுக்கிய தக்காளி
  4. நெல்லிக்காய் அளவுபுளி (15 ஊற வைத்து கரைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்)
  5. உப்பு
  6. தாளிக்க:
  7. 2-3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. கடுகு
  9. கடலைப்பருப்பு
  10. கறிவேப்பிலை
  11. வறுத்து அரைக்க:
  12. 1டேபிள்ஸ்பூன் தனியா விதை
  13. 1/4டீஸ்பூன் கடலைப்பருப்பு
  14. 1/4டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
  15. 1/4டீஸ்பூன் சீரகம்
  16. 1/4டீஸ்பூன் சோம்பு
  17. 5-7 வரமிளகாய்
  18. கொஞ்சம்பச்சரிசி, வெந்தயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்

  2. 2

    பிறகு பூண்டு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்

  3. 3

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த குழம்பு பொடியை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கி பிறகு ஒரு கப் தண்ணீர் உப்பு சேர்த்து மிதமான தீயில் 3நிமிடம் வைக்கவும்

  5. 5

    இப்போது புளிக்கரைசல் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes