ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)

Eswari
Eswari @eswari_recipes

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)

#bake
உங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் முழு கோதுமை மாவு
  2. 1 ஆப்பிள் துருவியது
  3. 1/4 கப் நாட்டு சாக்கரை
  4. 1/2 கப் பால்
  5. 1/2 கப்எண்ணெய்
  6. 1/4 கப் தண்ணீர் (தேவைக்கேற்ப)
  7. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  8. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  9. 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
  10. 1/4 தேக்கரண்டி உப்பு
  11. 1/2 தேக்கரண்டி வினிகர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான கடாயில், அரைத்த ஆப்பிள் மற்றும் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து, கெட்டியாகும் வரை சமைக்கவும். கலவையை குளிர்விக்கவும்.

  2. 2

    ஒரு சல்லடைக்கு முழு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து மூன்று முறை சல்லடை செய்யவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் கலவை, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். வினிகரை அதில் சேர்க்கவும்.

  4. 4

    ஈரமான பொருட்களில் 3 தொகுதிகளாக உலர்ந்த பொருட்களை சேர்க்கவும். அதை கட்டிகள் இல்லாமல் கலக்கவும். கட்டியாக இருந்தால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்கக்கூடாது.

  5. 5

    நன்கு கிரீஸ் செய்த பாத்திரத்தில் கலவையை ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடங்கள் ஓவெனில் வைக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Eswari
Eswari @eswari_recipes
அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

Similar Recipes