சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)

Eswari
Eswari @eswari_recipes

#steam
நம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.

சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)

#steam
நம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மாவு அரைப்பதற்கு
  2. 1கப் இட்லி அரிசி
  3. 1கப்சிறு பயறு
  4. 1/2கப் உளுத்தம் பருப்பு
  5. தண்ணீர்
  6. உப்பு
  7. தாளிப்பதற்கு
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு
  10. சீரகம்
  11. கருவேப்பிலை
  12. கேரட் துருவியது
  13. கொத்தமல்லி இலை
  14. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறு பயறை 6 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். அதேபோல் அரிசி மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவும்.

  2. 2

    முதலில் உளுந்தை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு மிக்ஸியில் சிறுபயிறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அரிசியுடன் தேவையான தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அரைத்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கையால் மாவை நன்கு கலக்கவும்.

  6. 6

    அரைத்த மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  7. 7

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் சேர்த்து பொரிக்கவும் பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  8. 8

    ஆறிய பிறகு தாளித்த பொருள்கள் மற்றும் கொத்தமல்லி இலையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  9. 9

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி அதை நன்கு சூடேறிய இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.

  10. 10

    பத்து நிமிடம் கழித்து தயாரான இட்லியை எடுத்து சூடாக பரிமாறவும்.

  11. 11

    பரிமாறும முறை:இந்த இட்லி சாம்பார் மற்றும் தக்காளி சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

  12. 12

    குறிப்பு:1)மாவு அரைக்கும் போது சிறிது சிறிதாக மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும் இட்லி மாவு கெட்டியாக தான் இருக்கவேண்டும்.2)மாவு புளிப்பதற்கு மாவை கையால் கலப்பது அவசியம்.3)இந்த இட்லியை தாளிப்பு இல்லாமலும் செய்யலாம்

  13. 13

    அன்பாக சமையுங்க! ஆரோக்கியமாக வாழுங்கள்!!😃

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Eswari
Eswari @eswari_recipes
அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

Similar Recipes