மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#Deepavali
#Kids2
#GA4
பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார்.

மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)

#Deepavali
#Kids2
#GA4
பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
12 பரிமாறுவது
  1. 300 கிராம் கடலைப்பருப்பு
  2. 450 கிராம் சர்க்கரை
  3. ஏலக்காய் தூள் தேவையான அளவு
  4. 50 கிராம் முந்திரி
  5. 50 கிராம் திராட்சை
  6. சிறிதளவுவெள்ளரி விதை
  7. 100 கிராம் நெய்
  8. தேவையானஅளவு கலர் பொடி

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    2 மணிநேரம் கடலைப்பருப்பை நன்கு ஊற வைக்கவும். பின் அதை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் வாணலியில் தண்ணீர் ஊற்றி சீனி பாகு தயார் செய்து கொள்ளவும். பின்னர் வாணலியில் முந்திரி திராட்சை வெள்ளரி விதையை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடலைப்பருப்பை சிறுசிறு வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின் அதை மிக்ஸியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளவும். சீனி பாகில் தேவையான அளவு கலர் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    சீனி பாகில் தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் அதில் அரைத்து வைத்த கடலை மாவு முந்திரி திராட்சை வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறவும்.

  6. 6

    மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.மிக எளிதில் செய்யக்கூடியது. அனைவருக்கும் பிடிக்கும் தீபாவளி பலகாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes