வாழைப்பூ வடை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

வாழைப்பூ வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2+30 நிமிடங்கள்
25 எண்ணிக்கை
  1. 1 தம்ளர் கடலை பருப்பு
  2. 1 கப் வாழை பூ பொடியாக அரிந்தது
  3. 1 பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
  4. 4 பச்சை மிளகாய்
  5. 1/2 ஸ்பூன் இஞ்சி துண்டுகள்
  6. 1/2ஸ்பூன் பெருங்காய தூள்
  7. 1/2 ஸ்பூன் சோம்பு
  8. 5பல் பூண்டு நசுக்கியது
  9. தூள் உப்பு தேவையான அளவு
  10. கருவேப்பிலை கொஞ்சம்
  11. கொத்தமல்லி தழை கொஞ்சம்
  12. பொறிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2+30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு டம்ளர் கடலைப்பருப்பு எடுத்து தண்ணீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். சோம்பு, உப்பு, பெருங்காயத்தூள் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.5 பல் பூண்டு நசுக்கி வைத்துக் கொள்ளவும். அரை இன்ச் அளவு இஞ்சி, 4பச்சை மிளகாய் எடுத்து வைத்து கொள்ளவும். கறிவேப்பிலை கொத்தமல்லி தழை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பூவை நரம்பு மற்றும் தொப்புள் (மெலிதான தோல்) மற்றும் கீழ் பாகத்தை நீக்கிவிட்டு பொடியாக அரிந்து கொள்ளவும். படத்தில் நீக்கிய பாகத்தை காட்டியுள்ளேன். பொடியாக அரிந்து மோரில் போட்டு வைத்துக் கொள்ளவும். வாழைப்பூ கருக்காது.

  3. 3

    இப்போது பருப்பு ஊறிய ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு முழு பருப்பு எடுத்து வைத்துவிட்டு பிறகு அதில் இஞ்சி, உப்பு,சோம்பு பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்து சேர்த்து கொள்ளவும். பாதி கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய வாழைப்பூ மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். எல்லாவற்றையும் வழித்து எடுத்துக் கொள்ளவும். (வாழைப்பூவை மோரில் இருந்து எடுத்து இரண்டு மூன்று முறை நன்கு கழுவி தண்ணீர் பிழிந்து கொள்ளவும்)

  4. 4

    (பருப்பில் உள்ள தண்ணீர் மற்றும் வாழைப்பூவில் உள்ள தண்ணீரை நன்கு வடித்துவிட்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.) எல்லாவற்றையும் எடுத்து வைத்த ஒரு டேபிள்ஸ்பூன் முழு பருப்புடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவையான அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்போது ஒரு வாணலியில் வடை சுடுவதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு சூடு படுத்தவும். உருட்டிய உருண்டைகளை ஒன்று ஒன்றாக உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெயில் போடும் போது அதிக சூட்டிலும், பிறகு மிதமான தீயில் சுடவும். இரண்டு புறமும் நன்கு திருப்பிவிட்டு எடுக்கும் முன்பு சில வினாடிகள் அதிக தீயில் விட்டு எடுக்கவும். வடை மொறுமொறுப்பாக இருக்கும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார். குழந்தைகள் வாழைப்பூவை பொரியலாகச் செய்து கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் வடையாக சுட்டு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes