தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)

தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி சட்டியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்கவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதன் பிறகு சின்ன வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்
- 3
சிக்கன் நன்றாக நிறம் மாறிய பிறகு இதில் மிளகாய்த்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு தக்காளி பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்
- 4
இப்போது குறைந்த தீயில் சிக்கனை 15 நிமிடம் வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை குக்கரில் வைப்பதாக இருந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மிதமான தீயில் ஒரு விசில் விடவும்
- 5
சிக்கன் முக்கால் பதம் வெந்த பிறகு இதில் தேங்காய் பால், தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வைக்கவும் அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும் இறுதியாக நெய் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை எலுமிச்சை சாறு சேர்க்கவும் பிறகு காற்று புகாதவாறு மூடியால் மூடி கனமான பாத்திரத்தை வைக்கவும் குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 7
15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து பிறகு 10 நிமிடம் கழித்து மெதுவாக கிளறி விடவும்
- 8
சுவையான தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி தயார்
Similar Recipes
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
- கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
- தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
- பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)
கமெண்ட் (7)