பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு
  1. 150 கிராம் பன்னீர்
  2. 4 கரண்டி சோள மாவு
  3. 1 ஸ்பூன் மைதா மாவு
  4. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1 ஸ்பூன் உப்பு
  8. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  9. மஞ்சூரியன் செய்ய
  10. 2 ஸ்பூன் எண்ணெய்
  11. 3பல்பொடியாக நறுக்கிய பூண்டு
  12. 2பெரிய வெங்காயம்
  13. 1சிறிய பச்சை மிளகாய்
  14. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  16. தேவையானஅளவு உப்பு
  17. 1 ஸ்பூன் சோள மாவு
  18. 1/2 ஸ்பூன் சில்லி சாஸ், சோயா சாஸ்
  19. 2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சோள மாவு மைதா மாவு உப்பு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் இவற்றை தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ளவும். இதோடு துண்டுகளாக வெட்டிய பன்னீரை சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்..

  2. 2

    15 நிமிடம் கழித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மஞ்சூரியன் செய்ய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    அதோடு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    ஒரு ஸ்பூன் சோள மாவில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்க்கவும். இப்பொழுது பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து வதக்கி எடுக்கவும்.

  5. 5

    குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் மஞ்சூரியன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes