மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரங்கள்
8 பரிமாறுவது
  1. 1கிலோபாஸ்மதி அரிசி
  2. 1கிலோமட்டன்
  3. 100கி+50கிநெய்
  4. 150கிகடலை எண்ணெய்
  5. 300கிராம்பெரிய வெங்காயம்
  6. 300கிராம்தக்காளி
  7. 5பச்சை மிளகாய்
  8. 3டேபிள் ஸ்பூன்+1\2டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. 2கைப்பிடிகறிவேப்பிலை
  10. 1கைப்பிடிகொத்தமல்லி தழை
  11. 2கைப்பிடிபுதினா இலை
  12. 1\2டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  13. -2டேபிள் ஸ்பூன்பிரியாணி பொடி
  14. 1\2டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள்
  15. 1\4ஸ்பூன்மஞ்சள் தூள்
  16. 1\2டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
  17. பட்டை, பூ, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, மராட்டி மொக்கு-தலா 2 துண்டுகள்
  18. 1\2கப்தயிர்
  19. 1\2மூடிஎலுமிச்சை பழம்
  20. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரங்கள்
  1. 1

    அடி கனமான, அகலமான பாத்திரத்தை வைத்து அதில் 100கி நெய்யும் எண்ணெயும் சேர்க்கவும். நன்கு காய்ந்ததும் பட்டை, பூ, இலை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்ரி, மராட்டி மொக்கு இவற்றை சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்

  4. 4

    கரம் மசாலா தூள், பிரியாணி பொடி, மிளகாய்த்தூள், மல்லித் தூள் இவற்றை சேர்த்து நன்கு மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்

  5. 5

    5 பச்சைமிளகாயை மிக்ஸி ஜாரில் சிறிது கரகரப்பாக அரைத்து சேர்த்து வதக்கவும்

  6. 6

    அரை கப் அளவு தயிர் சேர்க்கவும்

  7. 7

    பாசுமதி அரிசியை களைந்து கழுவி தண்ணீர் வடித்து சேர்த்து அரிசி உடையாமல் சிறிது கிளறி விடவும். (பிரியாணி செய்வதற்கு முன்னதாகவே பாஸ்மதி அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்)

  8. 8

    பிறகு வேக வைத்த மட்டனை சேர்த்து கிளறி விடவும்(முன்னதாகவே மட்டனை குக்கரில் 1\2 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து மட்டன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக விட்டு எடுத்து வைக்கவும்)

  9. 9

  10. 10

  11. 11

    ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் வீதம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். (மட்டன் வேக வைத்த தண்ணீர் இருந்தால் அதனையும் கலந்து சேர்க்கலாம்)

  12. 12

    சிறிது அரிசி வெந்து தண்ணீர் பாதியளவு வற்றியதும் அரை பழம் எலுமிச்சை பிழிந்து விடவும். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் வைத்திருக்கவும்

  13. 13

    பிறகு நெய் சேர்த்து மீண்டும் தட்டை போட்டு மூடி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து அரிசி உடையாமல் கிளறவும்

  14. 14

    இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பிரியாணி சட்டியின் மேல் நியூஸ் பேப்பரை முழுவதும் மூடுமாறு விரித்து அதன் மேல் தட்டை வைத்து மற்றொரு அடுப்பில் தோசைகல்லை வைத்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து பிரியாணி சட்டியை தூக்கி வைக்கவும்

  15. 15

    கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு அகலமான சட்டியில் எடுத்துக்கொண்டு பிரியாணி சட்டியின் மேல் வைக்கவும்

  16. 16

    அதன் மேல் மூடி 2 கல்லை வைத்து, 20 நிமிடங்கள் தம்மில் வைக்கவும். பொலபொலவெ, உதிரி உதிரியான பாசுமதி அரிசி மட்டன் தம் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes