பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948

பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் செய்ய
  2. 1 கப்சக்கரை
  3. 1/2 கப்பால்
  4. 1 ஸ்பூன்வெண்ணெய்
  5. பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ்
  6. 1/4 கப்முந்திரி
  7. 1/4 கப்சக்கரை
  8. 1 ஸ்பூன்வெண்ணெய்
  9. பட்டர் ஸ்காட்ச் கேக் செய்ய தேவையான பொருட்கள்
  10. 8முட்டை
  11. 2கப்மைதா
  12. 2கப்சக்கரை தூள்
  13. 1கப்பால்
  14. 1கப்எண்ணெய்
  15. 1 ஸ்பூன்வென்னிலா எஸ்ஸென்ஸ்
  16. கிரீம் செய்ய தேவையான பொருட்கள்
  17. 1கப்வணஸ்பதி
  18. 1கப்சக்கரை தூள்
  19. 1 டேபில் ஸ்பூன்பட்டர் ஸ்காட்ச் ஷாஸ்
  20. 1 ஸ்பூன்பட்டர் ஸ்காட்ச் எஸ்ஸென்ஸ்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் செய்ய ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலரவும்

  2. 2

    சக்கரை நன்றாக உருகி கலர் மாறியதும் அதில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்

  3. 3

    நன்றாக கலரவும் அடுத்து அதில் 1கப் பால் சேர்கவும்

  4. 4

    இப்போது பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் ரெடி

  5. 5

    பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் செய்ய ஒரு கடாயில் 1/4 கப் சக்கரை சேர்க்கவும்

  6. 6

    சக்கரை உருகியதும் அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  7. 7

    அதில் 1/4 கப் சின்ன சின்னதாக உடைத்த முந்திரியை சேர்க்கவும்

  8. 8

    சேர்த்து நன்றாக கலந்து விடவும் அதை ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் ஊத்தவும்

  9. 9

    அதை நன்றாக ஆறவிடவும்

  10. 10

    ஆறியதும் அதை உடைத்து ஒரு கவரில் போட்டு நன்றாக பொடி பன்னவும்

  11. 11

    இப்போது பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் தயார்

  12. 12

    பட்டர் ஸ்காட்ச் கிரீம் செய்ய ஒரு கிண்ணத்தில் 1கப் வனஸ்பதி சேர்க்கவும் அதை ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து நன்றாக கலந்து விடவும்

  13. 13

    பிறகு 1கப் சக்கரையை நன்றாக பொடி செய்து கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  14. 14

    பிறகு நாம் ரெடி பண்னிய பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் 1 டேபிள் ஸ்பூன் அதில் செர்த்து பட்டர் ஸ்காட்ச் எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  15. 15

    இப்போது பட்டர் ஸ்காட்ச் கிரீம் தயார்

  16. 16

    இப்போது பட்டர் ஸ்காட்ச் கேக் செய்ய 8 முட்டைகளின் வெள்ளை கரு மஞ்சள் கரு தனி தனியாக 2 பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்

  17. 17

    இப்போது 8 முட்டையின் மஞ்சள் கருவை ஒரு எலக்ட்ரிக் பீட்டர் பயண்படுத்தி நன்றாக கலந்து விடவும்

  18. 18

    பிறகு 1கப் சக்கரை தூளை கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  19. 19

    பிறகு அதில் 1கப் பால் சேர்க்கவும்

  20. 20

    பிறகு பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் 1/4கப் சேர்க்கவும்

  21. 21

    சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  22. 22

    பிறகு 2 கப் மைதா மாவு கொஞ்சம் கொஞ்சம்மாக சலித்து சேர்க்கவும்

  23. 23

    கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து வைக்கவும்

  24. 24

    அடுத்து வெள்ளை கருவை எலக்ட்ரிக் பீட்டர் வைத்து நன்றாக கலந்து விடவும்

  25. 25

    நன்றாக வெள்ளை கரு பொங்கி வந்ததும் 1 கப் சக்கரை தூள்ளை கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும் அத்துடன் 1 ஸ்பூன் பட்டர் ஸ்காட்ச் எஸ்ஸென்ஸ் சேர்கவும்

  26. 26

    ரெடி செய்து வைத்துள்ள வெள்ளைக்கரு கலவையில் மஞ்சள் கரு மாவு சேர்த்த கலவையை கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  27. 27

    இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து ஓவனில் 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  28. 28

    இப்போது கேக் ரெடி ஆனதும் நன்றாக ஆறவிடவும்

  29. 29

    நன்றாக ஆறியதும் கேக் கில் உங்களுக்கு பிடித்தவாறு அலங்கறிக்கவும்

  30. 30

    நாம் ரெடி செய்த பட்டர் ஸ்காட்ச் கிரீம் தடவவும்

  31. 31

    நாம் ரெடி செய்த பட்டர் ஸ்காட்ச் ஷாஸ் ஊத்தி அலங்கரிக்கவும்

  32. 32

    கேக் நடுவில் உங்களுக்கு பிடித்த மாதிரி அலங்கரிக்கவும்

  33. 33

    கேக் ஓரங்களில் கிரீம் வைத்து அலங்கரிக்கவும்

  34. 34

    இப்போது நாம் ரெடி செய்த பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் ஓரங்களில் போட்டு அலங்கரிக்கவும்

  35. 35

    அவ்வளவு தான் சூப்பர்ரான பட்டர் ஸ்காட்ச் கேக் அதிரடியாக 2021 க்கு தயாராகிவிட்டது.. என்னுடைய பதிவு பிடித்திருந்தால் தெளிவாக இருந்தால் லைக் பண்ணுங்க நண்பர்களே

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

கமெண்ட் (9)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
முட்டை சேர்க்காமல் செய்ய முடியுமா?

Similar Recipes