கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 2 கப்மைதா மாவு
  2. 2 கப்கடலைப்பருப்பு
  3. 2 கப்தேங்காய் துருவல்
  4. 2 கப்நாட்டு சர்க்கரை
  5. 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  6. 1 சிட்டிகைஏலக்காய்
  7. 2 மே.கநெய்
  8. 3 மே.கஎண்ணெய்
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மைதா மாவுடன்,மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    பின் தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    நாட்டு சர்க்கரை உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து பின் வடிகட்டி கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை

  4. 4

    ஊற வைத்த கடலைபருப்பை 1டம்ளர் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்

  5. 5

    கடலைப்பருப்பு வெந்ததும் தண்ணீரை வடித்து நன்றாக மசித்து கொள்ளவும்

  6. 6

    வடிகட்டி வைத்த நாட்டு சர்க்கரை கரைசலுடன் ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவு

  7. 7

    சர்க்கரை கரைசல் பிசுபிசுப்பு பதம் வந்ததும் துருவிய தேங்காய், மசித்த கடலைப்பருப்பு சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்

  8. 8

    கடலைப்பருப்பு கலவையை ஆறவிட்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்

  9. 9

    வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் சிறிது நெய் தடவி பிசைந்து வைத்த மைதா மாவில் சிறிது எடுத்து தட்டையாக்கி அதன் நடுவே கடலைப்பருப்பு கலவையை வைத்து உருட்டவும்

  10. 10

    உபரியாக உள்ள மாவை எடுத்து விடவும். மாவு தளர்வாக இருந்தால் தான் போலி மிருதுவாக இருக்கும் ன

  11. 11

    சிறிது நெய் தடவி கொண்டே இரண்டு விரல்களால் மெல்லிதாக தட்டிக்கொள்ளவும்

  12. 12

    பின் மிதமான தீயில் வைத்து தட்டிய போலி சேர்த்து வேக விடவும்

  13. 13

    இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் சிறிது நெய் தடவி தட்டில் மாற்றி பரிமாறவும்

  14. 14

    அருமையான போலி வீட்டிலேயே தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes