நுரையீரல் சுக்கா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

நுரையீரல் சுக்கா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கி ஆட்டின் நுரையீரல்
  2. 1 ஸ்பூன் மிளகு,சோம்பு,1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  3. 5 வத்தல்
  4. 2 ஸ்பூன் சீரகம், குண்டு மல்லி
  5. 2பட்டை, 4 கிராம்பு
  6. 25 பல் சின்ன வெங்காயம்
  7. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டுவிழுது
  8. தேவையான அளவு எண்ணெய், உப்பு, தண்ணீர்
  9. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி இலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நுரையீரலை சுத்தமாக கழுவிக் கொள்ளவும் பின் சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    பின் நுரையீரலை குக்கரீல் போட்டு அதில் தேவைக்கேற்ப உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் அளவாக தண்ணீரகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின் குக்கரை மூடிக் கொண்டு 5 விசில் வரும்வரை பொறுத்திருக்கவும் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும் தண்ணீரை சுக்காவில் சேர்த்துக் கொள்ளலாம்

  4. 4

    பிறகு மறுப்புறம் மசாலாத் தயார்ச் செய்யலாம் ஒருக்கடாயில் 1 ஸ்பூன் சோம்பு, மிளகு, 2 ஸ்பூன் சீரகம், குண்டு மல்லி மற்றும் 2 பட்டை, 4 கிராம்பு 5 வரமிளகாய் (வத்தல்) ச் சேர்த்துக் கொண்டு வறுத்துக் கொள்ளவும் பின் தண்ணீர் ஊற்றி paste பதத்திற்கு அரைத்துண் கொள்ளவும்

  5. 5

    பின் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, 25 பல் சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் பின் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்

  6. 6

    பிறகு நுரையீரலைச் சேர்த்துக் கொண்டு நன்றாக கிளரியப்பின் அவித்த தண்ணீரைச் சேர்க்கவும் பின் தண்ணீர் வற்றும் வரை பொறுத்திருக்கவும்

  7. 7

    நுரையீரல் முதலில் வேக வைக்கும் போதே உப்புச் சேர்க்கப்பட்டது என்பதால் அளவாகச் சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் வற்றியதும் கைப்பிடி அளவு மல்லி இலைகளைச் சேர்க்கவும்

  8. 8

    பின் இறக்கி பரிமாறவும் சுவையான காரசாரமான ஆட்டின் நுரையீரல் சுக்கா வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes